உடன்குடி அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதி இரண்டு வாலிபர்கள் படுகாயம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
சாத்தான்குளத்தை சேர்ந்த சக்திவேல் மகன் அஜித் குமார் (22 )இவர் சாத்தான்குளத்தில் இருந்து உடன்குடி நோக்கி நேற்று முன்தினம் மாலையில் பைக்கில் வந்துள்ளார்.
மெய்யூர் மெயின் ரோட்டில் பைக் வரும்போது எதிரே மணிநகர் புதூரைச் சேர்ந்த நிர்மல்ராஜ் மகன் டேனியல் இவர் உடன்குடியில் இருந்து புதூர் செல்வதற்காக பைக்கில் வந்துள்ளார். சம்பவ இடத்தில் வந்ததும் இருவருடைய பைக்கும்
எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது.
இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர் படுகாயம் அடைந்த அஜித்குமார் திருநெல்வேலியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில், டேனியல்ராஜ் திருச்செந்தூர் தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்
இதுகுறித்து மெஞ்ஞானபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.