முன்விரோதம் காரணமாக பிறவியிலேயே ஊமையான வாலிபரை தாக்கிய இருவர் கைது.
மெஞ்ஞானபுரம் அருகேயுள்ள குமாரலெட்சுமிபுரத்தைச் சேர்ந்த முருகன் மகன் செந்தில்குமார்(32) பிறவியிலேயே ஊமையான இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார்.
இவருக்கும் இதே ஊரைச் சேர்ந்த தங்கபெருமாள் மகன் சுரேஷ் என்பவருக்கும் சில நாட்களாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று இரவு செந்தில்குமார் மெஞ்ஞானபுரம் பஜாருக்கு சாப்பாடு வாங்க வந்தவர் தனது டூவிலரில் நவ்லடிவிளை வழியாக திரும்பியுள்ளார்.
அப்போது அங்கு வந்த சுரேஷ் மற்றும் அவரது உறவினர் கணேசன் மகன் மணிகண்டன் ஆகியோருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு கை கலப்பாக மாறி உள்ளது. அதில் சுரேஷ், மணிகண்டன் இருவரும் செந்தில்குமாரைதாக்கியுள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்த செந்தில்குமார் திருச்செந்துர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்த புகாரின் பேரில், சுரேஷ் மற்றும் மணிகண்டனை மெஞ்ஞானபுரம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.