உடன்குடி அருகே உள்ள ராமசாமிபுரத்தைச் சேர்ந்தவர் ஜெயபால் ( 35) கல்கண்டு கம்பெனியில் வேலை செய்து வருகிறார்
உடன்குடி கந்த புரத்தைச் சேர்ந்தவர் சிவபெருமாள் பனை தோழிலாளியான இவருக்கும் ஜெயபாலுக்கும் முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது
இந்த நிலையில் நேற்று முன்தினம் கொட்டங்காடு ஊரில் வைத்து ஜெயபாலுக்கும் சிவ பெருமாளுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் அங்கிருந்து இருவரும் சென்று விட்டனர்.
இந்த நிலையில் நேற்று காலையில் ஜெயபால் கந்தபுரத்தில் உள்ள சிவபெருமாள் வீட்டிற்கு சென்று சிவபெருமாளை தேடியுள்ளார். அப்போது சிவ பெருமாள் அங்கு இல்லை. பின்னர் ஜெயபால் அங்கிருந்து சென்று விட்டார்.
இந்த நிலையில் நேற்று இரவு ஜெயபால் கந்தபுரத்தில் இருந்து ராமசாமிபுரத்துக்கு சென்றுள்ளார். இதை நோட்டமிட்டு மறைந்து இருந்த சிவ பெருமான் தம்பி மோகன் (25) பின்னால் சென்று ஜெயபாலை அருவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதனால் ஜெயபால் சம்பவ இடத்திலேயே துடிதுடித்நு இறந்துள்ளார்
இதுகுறித்த தகவலின் பேரில் மெஞ்ஞானபுரம் போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெயபால் உடலை கைப்பற்றி திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்