10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற டி.வி.ஆர்.கே பள்ளி மாணவியை பா.ஜ., மாநில துணைத்தலைவர் பாராட்டி வாழ்த்தினார்.
ஸ்ரீவைகுண்டம் டி.வி.ராமசுப்பையர் & கிருஷ்ணம்மாள் ஹிந்து வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10ம்வகுப்பு பொதுத்தேர்வில் 100சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
இப்பள்ளி மாணவி ரங்கநாயகி 492மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். அதிகமதிப்பெண்கள் பெற்றுள்ள மாணவி ரங்கநாயகி தனது பெற்றோர்களுடன் மாநில பா.ஜ., துணைத்தலைவர் நாராயணன் திருப்பதியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இதில், தூத்துக்குடி தெற்குமாவட்ட தலைவர் சித்ராங்கதன், முன்னாள் மேயர் புவனேஸ்வரி, மாவட்ட நிர்வாகி ராஜா, துணைத்தலைவர் வழக்கறிஞர் முத்துராமலிங்கம், மாவட்ட செயலாளர் சங்கர், மாவட்ட பொதுச்செயலாளர் கனல்ஆறுமுகம், மாவட்ட அமைப்புசாரா பிரிவு தலைவர் சித்திரைவேல், மாவட்ட நிர்வாகிகள் முருகன், வழக்கறிஞர் சீனிவாசன், அரசன்துரைசாமி, மகேஷ், ஒன்றிய நிர்வாகிகள் பாலமுருகன், விநாயகா சரவணன், குமார்ராஜ், வேம்புராஜ், தினேஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மாணவிக்கு நல் வாழ்த்துக்கள்💐
பள்ளி நிர்வாகத்திற்கும் ஆசிரிய பெருமக்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்🙏.
உள்ளூர்செ ய்திகளை உடனுக்குடன் தெரியப்படுத்தி வரும் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் உடன் உள்ளோருக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்💐