நாசரேத் அருகே நடந்த கிரிக்கெட் போட்டியில் பாட்டக்கரை அணி வெற்றி பெற்று கோப்பை பரிசை தட்டிச் சென்றது.
நாசரேத் அருகே உள்ள தைலாபுரத்தில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிரிக்கெட் கிளப் சார்பில் மாபெரும் கிரிக்கெட் போட்டி 3 நாட்கள் நடந்தது.
போட்டியில் நாசரேத், பாட்டக்கரை, வெள்ளமடம், கருவேலம்பாடு, வெள்ளமடம், டிகேசிநகர், தைலாபுரம், மணிநகர் , பிரகாசபுரம் உள்ளிட்ட 16 ஊர் அணிகள் பங்கேற்றன.
இறுதிப்போட்டியில் பாட்டக்கரை அணியும், தைலாபுரம் அணியும் மோதின. இதில் பாட்டக்கரை அணி வெற்றி பெற்று கோப்பை பரிசை தட்டிச் சென்றது.
பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவிற்கு முன்னாள் நாசரேத் பேரூராட்சி தலைவர் ரவி செல்வகுமார் தலைமை வகித்து வெற்றி பெற்ற பாட்டக்கரை அணிக்கு பரிசாக கோப்பை மற்றும் ரொக்கப்பணம் ரூ.5 ஆயிரம் வழங்கினார். 2 வது இடத்தை பிடித்த தைலாபுரம் அணிக்கு கோப்பை மற்றும் ரொக்கப்பணம் ரூ.2,500/ வழங்கப்பட்டன.
இதனை சென்னை தொழிலதிபர் நோபர்ட் அன்பளிப்பாக வழங்கினார். இதில் பிடாநேரி ஊராட்சி திமுக கிளை செயலாளர் தொம்மை அந்தோணி, சாத்தான்குளம் ஒன்றிய பிரதிநிதி பொன்ராஜ், செல்வர் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தைலாபுரம் கிரிக்கெட் கிளப் தலைவர் ஐஸ்டின் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
த ஞான் ராஜ் கிறிஸ்டோபர்
புன்னகை தேசம்
நாசரேத் நிருபர்
94 87 44 56 55