திருநெல்வேலி மாவட்டம் இலந்தைகுளத்தை சேர்ந்த பட்டத்தேவர் மகன் மாரிபாண்டி (40), தனது நண்பர் சிலோன்காலனி சின்னத்துரை (35) உடன் புல்லட்டில் ஆழ்வார்திருநகரி நோக்கி சென்றார்.
இவர்கள் இருவரும் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து ஆழ்வார்தோப்பு செல்லும் ரோடு வழியாக சென்று நெல்லை & திருச்செந்தூர் புதிய தொழில் வழிச் சாலை சந்திப்பில் வந்து ஆழ்வார்திருநகரி நோக்கி திரும்பினர்.

அப்போது, திருச்செந்தூரில் இருந்து நெல்லை நோக்கி அடுத்தடுத்து வேகமாக வந்த மூன்று கார்கள் எதிர்பாராதவிதமாக பைக் மீது மோதியது.
இதில், தூக்கி வீசப்பட்ட மாரிப்பாண்டியும், சின்னதுரையும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவல் அறிந்த ஸ்ரீவைகுண்டம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரது உடலையும் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து ஸ்ரீவைகுண்டம் காவல் துறையினர் மூன்று கார் டிரைவர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.