Tue. Apr 29th, 2025

தூத்துக்குடியில் அரசு பேருந்து மீது கல்வீசி கண்ணாடி உடைப்பு

தூத்துக்குடியில் அரசு பேருந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்திய வட மாநில வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய துறைமுகத்திற்கு ஒரு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது.

இந்த பேருந்தை செல்வநாயகபுரத்தைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் ஓட்டி வந்தார். இப்பேருந்து  புதிய துறைமுகம் சென்றுவிட்டு கேம்ப் 1 வழியாக முத்துநகர் சந்திப்பு புதிய பாலம் கட்டுமிடத்தில் திரும்பும் போது வடமாநில வாலிபர் ஒருவர் திடீரென பேருந்தின் முன்பக்க கண்ணாடி மீது கல்வீசி விட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமானது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தெர்மல் நகர் காவல் நிலையத்தில் அரசு பேருந்து ஓட்டுநர்  செல்வ குமார் புகார் அளித்துள்ளார்.

அதன்பேரில் ஆய்வாளர் ஷோபா ஜென்சி வழக்கு பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வட மாநில வாலிபரை தேடி வருகிறார்.

Related Post