சாத்தான்குளம் அருகே உள்ள புதுக்குளம் கிராமம் ஆலங்கினறு காலணியில் இன்று (26.03.2025) காலை 9.30மணியளவில் சிவன் என்பவரின் மனைவி அருளம்மாள் (வயது70) மகன் காசிவேல், காசிவேல் என்பவரின் மகன் பரத் ஆகிய மூவரும் சேர்ந்து சொத்து பிரச்சனை காரணமாக சிவன் என்பவரின் இன்னொரு மகன் அந்தோணி ராஜ் (வயது50) என்பவரை தாக்கினர்
மேற்படி தாக்கப்பட்ட நபரை மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அங்குள்ளவர்கள் அனுப்பி வைத்தனர்
மேற்படி நபரை பரிசோதித்த மருத்துவர் அந்தோணிராஜ் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
மேற்படி அந்தோணி ராஜ்க்கு திருமணமாகி இசக்கியம்மாள் (46) என்ற மனைவியும் 2 மகன் 3 மகள் உள்ளனர்.
கொலைச் சம்பவம் குறித்து அறிந்த சாத்தான்குளம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
இக்கொலை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது