Sun. Jan 18th, 2026

சாத்தான்குளம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

குரும்பூர் அங்கமங்களத்தை சேர்ந்த கல்யாண சுந்தரம் என்பவரது மகன் மணிராஜ். வயது 19 ஆகிறது. இவர் வீடு மற்றும் கடைகளுக்கு பிளம்பிங் வேலை செய்து வருகிறார்.

சாத்தான்குளம் அருகே உள்ள வடக்கு பன்னம்பாறையைச் சேர்ந்த இசக்கி பாண்டி என்பவர் வீட்டில் பிளம்பிங் வேலை செய்து கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக பிரேக்கர் இயந்திரத்தில் மின்சாரக் கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கி உள்ளது 

மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே மணிராஜ் பலியானார்

இது குறித்து தகவல் அறிந்த சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளர் எட்வின் அருள்ராஜ் அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று  விசாரணை செய்து வருகிறார்

Related Post