ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 30-ஆம் நாள் சுதந்திர போராட்ட தியாகிகளுக்காக இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தி தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டு வருகிறது.

அதனை முன்னிட்டு ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர் (கி. ஊ) சிவராஜன் ஆகியோர் தலைமையில் இரண்டு நிமிடங்கள் சுதந்திர போராட்ட தியாகிகளுக்காக மெளன அஞ்சலி செலுத்தப்பட்டு, தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஆழ்வார் திருநகரி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சரஸ்வதி, மகேந்திர பிரபு, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பொன் குமார், மரிய செபஸ்டி, சண்முக செல்வி மற்றும் அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டு தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்தனர்.



