மெஞ்ஞானபுரம் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் சங்க அலுவலகத்திற்கு திடீரென்று வந்த தவெக கட்சியை சேர்ந்த தூத்துக்குடி மாவட்ட தேர்தல் கண்காணிப்பாளர், மற்றும் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி முன்னாள் வேட்பாளர் லயன், முருகனிடம். விவசாயிகள் மெஞ்ஞானபுரம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பல கிராமங்கள் நிலத்தடி நீர் அதல பாதாளத்தில் சென்று விட்டதாலும், உப்பாக மாறிவிட்டதாலும், அந்தப் பகுதியில் உள்ள மக்கள் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டில் உள்ளனர். மற்றும் ஏராளமான கால்நடைகள் தீவனங்கள் மற்றும் குடி தண்ணீர் இல்லாமல் தவித்து வருவதாகவும், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும். கடந்த வருடங்களில் எப்போதும் இல்லாத அளவிற்கு ஏற்பட்டுள்ள அதிக வெப்பத்தினால் பயங்கரமான வறட்சியை சந்தித்து வருவதாக கூறினர்.
இந்த நிலை மாறி குடி தண்ணீர் தட்டுப்பாட்டில் இருந்து மக்களை பாதுகாக்க சடையனேரி கால்வாயை நிரந்தர கால்வாயாக மாற்றி தர நடவடிக்கை எடுக்க, தங்களது கட்சி மேலிடத்திற்கு மெஞ்ஞானபுரம் சுற்றுவட்டார பகுதி நிலைமையை குறித்த தகவல்களை தெரியப்படுத்தி தற்போதைய டி வி கே அரசு மூலமாக சடையனேரி கால்வாயை நிரந்தர கால்வாயை மாற்றி மெஞ்ஞானபுரம் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த அனைத்து கிராம மக்களுக்கும் உதவி செய்யுமாறு விவசாய சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர்.
இந்த சந்திப்பில் மெஞ்ஞானபுரம் சுற்றுவட்டார பகுதி விவசாயி சங்க தலைவர் டேனியேல், செயலாளர் ஜெகதீசன், பொருளாளர் முருகேசன் மற்றும் நிர்வாகிகள் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.


