நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் இந்த கல்வியாண்டின் மூன்றாம் பருவத்திற்கான தமிழக அரசின் விலையில்லா பாடப் புத்தகங்கள் 6ம் வகுப்பு மற்றும் 7ம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும்தலைமை ஆசிரியர் குணசீலராஜ் வழங்கினார்.
இவ்விழாவில் இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ், பாட புத்தகங்களின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
பாட புத்தகங்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும், அன்றன்று நடத்தக்கூடிய பாடங்களை நாள்தோறும் கற்க வேண்டும், இந்த கல்வியாண்டின் மூன்றாம் பருவத்தில் மாணவர்கள் நன்கு கல்வி கற்று அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என மாணவர்களை கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியர் சார்லஸ் திரவியம், உடற்கல்வி இயக்குனர் பெலின் பாஸ்கர், என்சிசி அலுவலர் சுஜித் செல்வ சுந்தர்,பிற ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆசிரியர் பட்டுராஜன், ஓவியக்கலை ஆசிரியர் அலெக்ஸன் கிறிஸ்டோபர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் தனபால் ஆகியோர் செய்திருந்தனர்.
த. ஞான்ராஜ் கிறிஸ்டோபர்
புன்னகை தேசம்
நாசரேத் -நிருபர்
94 87 44 56 55