Mon. Aug 25th, 2025

தமிழக முதல்வரின் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டம் நாளை சாத்தான்குளம், ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் மற்றும் பள்ளக்குறிச்சி வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களில் மனுக்கள் பெறும் முகாம்

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வந்து செயலாற்றும் வகையில் அறிவித்துள்ள “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டம் 22.01.2025 அன்று சாத்தான்குளம் வட்டத்தில் நடைபெற உள்ளது. மேற்படி முகாம் நடைபெறுவதை முன்னிட்டு முன்னோடி மனுக்கள் பெறும் முகாம் சாத்தான்குளம், ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் மற்றும் பள்ளக்குறிச்சி ஆகிய குறுவட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களில் 03.01.2025 அன்று (வெள்ளிக்கிழமை) முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை நடைபெறவுள்ளது. மேற்படி முகாம் நடைபெறும் நாளன்று பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட குறுவட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களில் மனுக்கள் மூலம் அளித்து பயன் பெற்றுக்கொள்ளும்படி சாத்தான்குளம் வட்டாட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார

Related Post