spot_img
22.4 C
New York
Tuesday, July 28, 2026

Buy now

spot_img

ஜனநாயகன் திரைப்படம் வெற்றி பெற வேண்டி கோயிலில் சிறப்பு வழிபாடு

நடிகர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் வெற்றிபெற தவெகவினர் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்தனர்.

திரையுல பிரபல நடிகர் விஜய் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக நடித்த ஜனநாயகன் திரைப்படம் வெளியாவதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது.

இதற்கிடையே சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட நடிகர் விஜய் அதிகப்படியான இடங்களில் வெற்றி பெற்று தமிழக முதல்வராக பொறுப்பேற்று விட்டார்.

தற்போது பல்வேறு தடைகளை எல்லாம் தகர்த்து தமிழக முதல்வரும், நடிகருமான விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் வெளிவரவுள்ளது.

இந்த திரைப்படம் வெற்றி பெறவேண்டும் என்று தூத்துக்குடி மேற்கு மாவட்டம் மற்றும் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி தவெகவினர் செய்துங்கநல்லூர் சுந்தரபாண்டி சாஸ்தா கோயிலில் நேற்று (புதன்கிழமை) சிறப்பு வழிபாடு செய்தனர்.

ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் அன்னை விஜிசரவணன் வழிகாட்டுதல்படி கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளை தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தினர் பக்தர்கள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.

இதில், மாவட்ட இளைஞரணி செயலாளர் மணிமுருகன், மாவட்ட இணை செயலாளர் விஜய்முத்து, மாவட்ட பொருளாளர் செந்தில், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சேர்மராஜா, ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி வழக்கறிஞர் பிரிவு தலைவர் தில்லைசிதம்பரம், ஒன்றிய தலைவர் மாரியப்பன், மாவட்ட மாணவரணி செயலாளர் ஈஷா மாரீஸ்வரன், நிர்வாகிகள் மணிகண்டன், சரவணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இணைந்திருங்கள்

0FansLike
0FollowersFollow
22,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

தொடர்புடைய செய்திகள்