நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி பள்ளியில் கிறிஸ்மஸ் மற்றும் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.
நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி
தூ.நா.தி.அ.க தூய. மாற்கு தொடக்கப்பள்ளியில் கிறிஸ்மஸ் மற்றும் பள்ளி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளி தாளாளர் ஞான சிங் எட்வின் ஜெபித்து கிறிஸ்மஸ் செய்தி வழங்கினார் . சபை ஊழியர் ஜனோ செல்வகுமார் வேத பாடம் வாசித்தார்.
சிறப்பு விருந்தினர்களாக பரிபாலன கமிட்டி தலைவர் சாமுவேல் செயலர் ஜெயச்சந்திரன் முன்னாள் வங்கி மேலாளர் ஆனந்த ஜோதி பாலன் ஆங்கில பள்ளி தலைமை ஆசிரியை செல்வராணி மற்றும் திருமண்டல பெருமன்ற உறுப்பினர் சுரேஷ் முன்னிலை வகித்தார்.
தலைமை ஆசிரியை கனக ரதி பெப்பின் அனைவரையும் வரவேற்றார். உதவி ஆசிரியை ஜெபகுமாரி ஜேனட் ஆண்டறிக்கை வாசித்தார்.
பள்ளி தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கிறிஸ்துமஸ் புத்தாடை அனைத்து
மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளை ஆசிரியைகள் ரதி கிளி, அஜிதா செலினா தொகுத்து வழங்கினர். தலைமையாசிரியை நன்றி கூறினார்