நாலுமாவடி தேவனுடைய கூடாரத்தில் நடந்த அற்புத விடுதலை பிரார்த்தனை கூட்டத்தில் இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி.லாசரஸ் சிறப்பு பிரார்த்தனை செய்தார்.
நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் ஒவ்வொரு வாரமும் வியாழக் கிழமை தோறும் அற்புத விடுதலை பிரார்த்தனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த வாரமும் நேற்று (வியாழக்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை அற்புத விடுதலை பிரார்த்தனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் இயேசு விடுவிக்கிறார் ஜெபக் குழுவினர் சிறப்பு பாடல்கள் பாடினர்.
இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி.லாசரஸ் தேவசெய் தியளித்து சிறப்பு பிரார்த்தனையை நடத்தினார்.
இக்கூட்டத்தில் வியாதியஸ்தர்களுக்காக சிறப்பு பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது. இதில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து திரளானோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவன பொது மேலாளர் செல்வக்குமார் மற்றும் ஜெபக்குழுவினர் செய்திருந்தனர்.