Thu. Jan 15th, 2026

சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலக கேட் மூடப்பட்டதால் பொதுமக்கள் அவதி

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து தங்களது பிரச்சினைகளை தெரிவித்து தீர்வு கண்டு வந்தனர்

இந்நிலையில் இன்று (20.12.2024) வெள்ளிக்கிழமை காலை முதல் வட்டாட்சியர் அலுவலகத்தில் கேட்  மூடப்பட்டுள்ளது

இதுபோல் இதனால் பொதுமக்கள் சாத்தான்குளம் வட்டாட்சியர் மற்றும் வருவாய் துறை அலுவலர்களை சந்தித்து தங்களது குறைகளை தெரிவித்து தீர்வு காண்பதற்கு பொதுமக்கள் சிரமப்பட்டனர்

சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலக கேட்டில் வருவாய்த்துறை பணியாளர் ஒருவர் கேட்டை திறந்து பொது மக்களிடம் தகவல் கேட்ட பிறகே பொதுமக்களை வட்டாட்சியர் அலுவலகத்திற்குள் அனுப்பி வருவது குறிப்பிடத்தக்கது

பா. ஜான்சன் பொன்சேகர்
புன்னகை தேசம் நிருபர்
சாத்தான்குளம்

Related Post