சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கலையரங்கத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான கிறிஸ்துமஸ் புத்தாடைகள் வழங்கும் விழா பள்ளித் தாளாளர் நல்லாசிரியர் நோபல்ராஜ் தலைமையில் நடந்தது.

சேகர குரு டேவிட் ஞானையா ஆரம்ப ஜெபம் செய்தார். பள்ளி முதல்வர் டெனோ ராஜாத்தி வரவேற்றார்.

நூறு மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன.

வியாபாரிகள் சங்க செயலாளர் மருத்துவர் மதுரம் செல்வராஜ் தென்மண்டல ஒருங்கிணைந்த மாற்றுத்திறனுடையோர் முன்னேற்ற சங்கத் தலைவர் பேர்சில் சாத்தான்குளம் வட்டார மனிதநேய நல்லிணக்க பெருமன்றச் செயலாளர் மகா பால் துரை ஆகியோர் பேசினர் .

நீரோடை அறக்கட்டளை தலைவர் போதகர் பால் ஆபிரகாம் நன்றி கூறினார்.

தொழில் முனைவோர் பிரபு ரத்னா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.

விழா ஏற்பாடுகளை டெய்சி பொன்ராஜ் ,செல்வி,ஜெஃப்ரின் ஆகியோர் செய்திருந்தனர்.
