தூத்துக்குடி மாவட்டம்நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி கிளை நூலகம் சார்பில் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் 143 வந்து பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

நாட்டின் விடுதலைக்காக தனது புரட்சி எழுத்துக்கள் மூலம் விடுதலை எழுச்சியூட்டிய எட்டயபுரத்து முண்டாசுக் கவிஞன் மகாகவி பாரதியின் 143 வது பிறந்தநாள் விழா மூக்குபீறி நூலகத்தில் நடந்தது
விழாவிற்கு நூலகர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகுத்து வரவேற்புரை ஆற்றினார்.
மூக்குப்பேறி ஏக ரட்சகர் சபை நடுநிலைப்பள்ளி பள்ளி தலைமை ஆசிரியர் ராஜன் பேசினார் . முன்னாள்தலைமை ஆசிரியரும் எழுத்தாளருமான ஞான ராஜ் தேவதாசன் பாரதியார் வாழ்க்கை வரலாற்றை சொல்லி சிறப்புரை ஆற்றினார்.
இவ்விழாவில் மூக்குப்பீறி ஏக ரட்சகர் சபை நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
த. ஞானராஜ் கிறிஸ்டோபர்
புன்னகை தேசம்
நாசரேத் நிருபர்