
செய்துங்கநல்லூரில் அதிமுகவினர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு தினத்தில் மவுன அஞ்சலி செலுத்தினர்.
கருங்குளம் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் 8ம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.
செய்துங்கநல்லூர் பஜாரில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படத்திற்கு கருங்குளம் ஒன்றிய செயலாளர் பரமசிவன் தலைமையில் துணை செயலாளர் குட்டி, ஒன்றிய ஜெ.பேரவை செயலாளர் ஐய்யப்பன், பஞ்சாயத்து தலைவர் உதயசங்கர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதனைத்தொடர்ந்து, மலர் தூவி இரண்டுநிமிட இரங்கல் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில், அதிமுக நிர்வாகிகள் பூல்பாண்டியன், முத்தையா, கதிரேசன், ராஜ்பாண்டியன், பாலமுருகன், விஜயபாண்டி, ஆரோக்கியம், வெங்கடாச்சலம், ஜாகிர்உசேன், மாரியப்பன், அயூப்கான், லெட்சுமணன், சாமி, பேச்சிமுத்து, வண்டிமலையான், தமிழரசன், கனகராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.