Thu. Jan 15th, 2026

மழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

பருவமழை தொடங்கியதை அடுத்து தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கடலோர மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது 

கன மழை காரணமாக கடலூர், விழுப்புரம், திருவள்ளூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (27.11.2024 புதன்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது

Related Post