Thu. Jan 15th, 2026

இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் : டிஐஜி உத்தரவு!

நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் 13 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்து நெல்லை சரக டிஐஜி மூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி தூத்துக்குடி மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை இன்ஸ்பெக்டர் ரேனியல் ஜேசுபாதம் திருச்செந்தூர் குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கும், குலசேகரப்பட்டினம் இன்ஸ்பெக்டர் ரகுராஜன் கூடங்குளம் காவல் நிலையத்திற்கும், தூத்துக்குடி வடபாகம் குற்றப்பிரிவு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கண்ணன் குலசேகரப்பட்டணம் காவல் நிலையத்திற்கும் சாத்தான்குளம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாமா பத்மினி புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்னர்.

இதுபோல் நெல்லை கன்னியாகுமரி மாவட்டங்களில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Post