Sat. Dec 13th, 2025

தடிக்காரன்கோணத்தில் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்.

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டமான 100 நாள் வேலைத்திட்டம் கடந்த சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது,இதனால் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால்,100 நாள் வேலைத்திட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று மாலை தடிக்காரன்கோணம் சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,இதில் தடிக்காரன்கோணம் ஊராட்சி மன்ற தலைவர். பிராங்கிளின் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Post