சாத்தான்குளம் வட்டம், கட்டாரிமங்கலம் கிராமம் அறிவான்மொழி ஊரைச் சேர்ந்த பால் என்பவரது மகன் பொன். வயது 75.
இவருக்கு திருமணமாகி குழந்தைகள் ஏதும் இல்லை. மனைவியுடன் தனியாக வசித்து வந்துள்ளார் .
இந்நிலையில் சுருட்டை பிடித்துவிட்டு அணைக்க மறந்து நார்கட்டில் மீது வைத்ததில் தீ கங்கானது நார்கட்டில் எரிந்தது.

வயது முதிர்வு காரணமாக நடக்க முடியாத நிலையில் நார்க் கட்டிலில் படுத்து இருந்த பொன் என்பவர் மீதும் தீ பிடித்து தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது
மேற்படி தீ காயம் ஏற்பட்ட நபரை மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.
சம்பவம் குறித்து சாத்தான்குளம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
