spot_img
13.6 C
New York
Tuesday, October 27, 2026

Buy now

spot_img

நாசரேத்தில் 3 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட வாலிபரை அக்.3ல் ஆஜர்படுத்த வேண்டும்! சாத்தான்குளம் கோர்ட் உத்தரவு

நாசரேத்தில் 3 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட வாலிபரை அக்.3ல் ஆஜர்படுத்த வேண்டும் என சாத்தான்குளம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தூத்துக்குடி ராமதாஸ் நகர்,தாளமுத்து நகர் கவுசிங் போர்டு பகுதியில் சேர்ந்தவர் சம்சுதீன் மகன் பீர்கனி (எ) பீர்முகம்மது. இவர் மீது நாசரேத் காவல் நிலைய த்தில் கடந்த 2019 ஆண்டு நடந்த குற்ற நிகழ்வு காரணமாக 457, 34, 397 ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இந்த வழக்கு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு சாத்தான்குளம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக அவர் தொடர்ந்து முன்னிலையாகாமல் இருந்து வந்ததால் நீதிமன்றம் அவருக்கு எதிராக பிணையில்லா பிடிக்கட்டளை பிறப்பிக்கப்பட்டு பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வருகிறது. ஆகையால், வரும் 03.10.2026 ஆம் தேதி 10.30 மணிக்கு சாத்தான்குளம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என்றும், குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 82 ன் படி இந்த பகிரங்க அறிவிப்பு அளிக்கப்படுகிறது.

தவறும் பட்சத்தில் அவருடைய அசையும் மற்றும் அசையா சொத்துக்களை ஜப்தி செய்ய நேரிடும் என்றும், சட்டப்படியான இதர மேல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்து சாத்தான்குளம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாசரேத் போலீசார் அதற்கான நடவடிக்கைகளை எடுத்து தலைமறைவாக உள்ள பீர்கனி (எ) பீர்முகம்மதுவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது

மேலும் படிக்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இணைந்திருங்கள்

0FansLike
0FollowersFollow
22,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

தொடர்புடைய செய்திகள்