Tue. Jul 1st, 2025

டிசம்பர் 21ல் நாலுமாவடியில் மாணவர்களுக்கான கிறிஸ்துமஸ் மாரத்தான் போட்டி: டிசம்பர் 15 ஆன்லைனில் பதிவு செய்ய கடைசி நாள்!

நாலுமாவடியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வருகிற 21ந் தேதி நடைபெறுகிற மாரத்தான் போட்டிகளை இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி. லாசரஸ் தொடங்கி வைக்கிறார்.

நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ரெடீமர்ஸ் கிளப் சார்பில் கிறிஸ்து பிறப்பு பண்டிகையான கிறிஸ்துமஸை முன்னிட்டு மாபெரும் மாரத்தான் போட்டிகள், வருகிற 21ந் தேதி சனிக்கிழமை காலை 6மணிக்கு நாலுமாவடி ஏலிம் விளையாட்டு மைதானத்தில் வைத்து துவங்குகிறது.

இதனை இயேசு விடு விக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி. லாசரஸ் தலைமை வகித்து ஜெபித்து தொடங்கி வைக்கிறார்.

இதில் கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி, பள்ளி மாணவிகள் என 3 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்படு கிறது.

கல்லூரி மாணவர் களுக்கு 17 கிமீ தூரமும், பள்ளி மாணவர்ளுக்கு 10.கிமீ தூரமும், கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளுக்கு 5 கிமீ தூரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கல்லூரி மாணவர்களுக்கு முதல் பரிசு 10 ஆயிரம், 2ம் பரிசு 8 ஆயிரம், 3ம் பரிசு 6 ஆயிரம் ரூபாயும், பள்ளி மாணவர்களுக்கு முதல் பரிசு 8 ஆயிரம், 2ம் பரிசு 6 ஆயிரம், 3ம் பரிசு 4 ஆயிரம் ரூபாயும், கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளுக்கு முதல் பரிசு 6 ஆயிரம், 2ம் பரிசாக 4 ஆயிரம், 3ம் பரிசு ரூ 2 ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்பட உள்ளது.

மேலும் இப்போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

முன் பதிவு செய்ய கடைசி நாள், டிச.15ந் தேதி ஆகும். போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் https:jesusredeems.com/jr-runners/ என்ற இணையதளத்தில் இலவசமாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.

போட்டியில் பங்கேற்கும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் தங்களது பள்ளி, கல்லூரி அடையாள அட்டை மற்றும் ஆதார் கார்டு கண்டிப்பாக கொண்டு வர வேண்டும்.

பங்கு பெறும் அனைவருக்கும் காலை உணவும், டி-சர்ட்டும் வழங்கப்படும். மேலும் போட்டி நடைபெறும் முந்தைய நாள் இரவு தங்குவதற்கு மாணவ – மாணவிகளுக்கு தனித்தனி இடம் ஒழுங்கு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டிக்கான ஏற்பாடுகளை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி.லாசரஸ், ஊழிய நிறுவன பொதுமேலாளர் செல்வகுமார், விளையாட்டு துறை ஒருங்கிணைப்பாளர் மணத்தி எட்வின், மக்கள் தொடர்பு அலுவலர் சாந்தகுமார் மற்றும் ஜெபக்குழுவினர் செய்து வருகின்றனர்.

த ஞான ராஜ் கிறிஸ்டோபர்
புன்னகை தேசம்
நாசரேத் -நிருபர்

Related Post