Tue. Aug 26th, 2025

நாசரேத்தில் பாடகர் ஞாயிறு ஆராதனை


தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம்
திருமறையூர் மறுரூப ஆலயத்தில் பாடகர் ஞாயிறு நடைபெற்றது.

சேகர தலைவர் ஜான் சாமுவேல் தலைமை வகித்து ஆரம்ப ஜெபம் செய்தார். இந்த ஆராதனையில் ஒய்வு பெற்ற ஆசிரியை விக்டோரியா ஞானசிங் தேவ செய்தி அளித்தார். அதைத்தொடர்ந்து சிறப்பு ஆராதனையில் பாடகர் குழுவினரின் சிறப்பு பாடல்கள் இடம் பெற்றது.

இறுதியில் பாடகர் குழுவினருக்கு சபையின் சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டது.

முடிவில் தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் முன்னாள் குருத்துவக் காரியதரிசிஓய்வு பெற்ற குருவானவர் தேவராஜ் ஞான சிங் ஜெபித்து ஆசீர்வாதம் வழங்கினார்.

இந்த ஆராதனையில் சபை ஊழியர் ஸ்டேன்லி ஜான்சன் துரை, ஆலய பணியாளர் ஆபிரகாம், திருமண்டல பெருமின்ற உறுப்பினர் ஜெயபால், தேவதாஸ் சேகரச் செயலர் ஜான்சேகர் சேகர பொருளாளர் அகஸ்டின் செல்வராஜ், கமிட்டி அங்கத்தினர்கள் மற்றும் சபையார் கலந்து கொண்டனர்

பாடகர் ஞாயிறு க்கான ஆராதனை ஏற்பாடுகளை பாடகர் குழு தலைவர் ஜோயல் கோல்டு வின் அவர்களோடு இணைந்து சேகரத் தலைவர் ஜான் சாமுவேல் செய்திருந்தார்

Related Post